neeya naana gopinath own emporiyam
'நீயா நானா' கோபிநாத் என்றால் பெரும்பாலானவர்களும் தெரியுமே என்பார்கள்! ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். நிகழ்ச்சி தொகுப்பையும் கடந்து, நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து பிரபலமானவர்.
தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரைப் பற்றி தெரிந்த அளவிற்கு பலருக்கும் இவருடைய மனைவி துர்கா பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் பொதுவாக இவர் அதிகமாக வெளியில் வரமாட்டார். மிகவும் அமைதியானவர்.

கணவர் என்னதான் லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும், பெண் வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என நன்கு புரிந்து கொண்டுள்ள துர்கா... அசோக் பில்லர் அருகே கோபிநாத்தின் ஆபீஸ் அமைந்துள்ள இடத்திலேயே ஒரு எம்போரியம் வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு பெண்களுக்காக பிரத்யேகமாக ஆடைகளை தைத்துக் கொடுக்கிறார்களாம்.பிரபலங்கள் சிலரும் இந்த எம்போரியத்துக்கு வடிகையாளர்களாக உள்ளனராம்.
