nazriya controversy issue

2006 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா ஹீரோயினாக நடிக்க வந்ததும் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

அதிலும் தமிழ் திரையுலகில், இவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு, குறும்புத்தனமான முக பாவனைகள், நடிப்பு, அழகு என அனைவர் மனதையும் கொள்ளையடித்தார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பாத்தபோது. மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி கேரளாவில் அமைத்துள்ள பிரபல மருத்துவ மனைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் அவர் கர்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கு நஸ்ரியா நான் கர்ப்பமாக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் நான் கர்ப்பமாக இருந்தால் அதனை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என மிகவும் கோபமாக கூறியுள்ளார்.