மிகவும் ரகசியமானவளாக இருக்க விரும்புகிறேன்,  என்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதை நான் எப்போதும் விரும்புவதில்லை என நீண்ட நாட்கள் கழித்து நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.

கடத்தப்பட்ட ஆண்டுகளுக்குப்பிறகு நடிகை நயன்தாரா ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு  மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்,  அதில் கூறியுள்ள அவர் ,  கடந்த பத்தாண்டுகளில் நான் கொடுக்கும்  முதல் போட்டி இதுதான்.  இத்தனை ஆண்டுகளாக பேட்டி கொடுக்காமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றால்,  நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.   நான் மிகவும் ரகசிய மிக்கவராக இருக்க விரும்புகிறேன்.  கூட்டம் எனக்கு ஒத்து வராது.  அத்துடன் பேட்டிகளில் நான் சொல்வதை பலமுறை திரித்து தவறாக செய்திகள்  பிரசுரிக்கப்பட்டுள்ளது.  அதை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. என தெரிவித்துள்ளார்.

 

என வேலை நடிப்பது மட்டும் தான்.  நான் பேசுவதை விட என்  படங்கள் பேச வேண்டும் என விரும்புகிறேன். கதாநாயகிக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே இனி நடிப்பதாக கூரும் நீங்கள் சில நேரங்களில் கதாநாயகர்களை போற்றிப் புகழும் படங்களிலும் நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,  சில சமயங்களில் வேறு வழி இல்லை.  இப்படி நடிக்க முடியாது என ஒவ்வொரு படங்களையும் கூறினாள் எந்த படத்திலும் நடிக்க முடியாது என்ற நிலையே உள்ளது. இப்படி  எத்தனை படங்களில்தான் நடிக்க முடியாது என நான் கூற முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.