nayantharas film aram conveyed the story is about farmers
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடித்து இன்று வெளிவந்துள்ள படம் தான் அறம்.
இன்று வெளியாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அறம் படத்தை பொறுத்தவரையில், விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்
இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
படக்குழு
படத்தொகுப்பு - ரூபன்,
ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,
இசை - ஜிப்ரான்,
வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ்
தயாரிப்பு - கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்,
கதை, திரைக்கதை, இயக்கம்- கோபி நயினார்
மாவட்ட ஆட்சியராக வலம் வரும் நயன்தாரா , ஒரு கிராமத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையும் அதனால் விவசாயிகள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் , அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது ....என ரொம்ப பிசியாக இருக்கிறார்
அந்த கிராம மக்களுக்காக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், விறுவிறுப்பாக நகரக் கூடிய திரைக்கதையும் மிக அழகாக வந்துள்ளது
இதை எல்லாம் மீறி, ஒரு கம்பீர தோற்றத்துடன் காணப்படும் நயன்தாரா மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து வருகிறார்
மொத்தத்தில் இந்த படம் மூலம் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
