Nayantharas Aram movie Review
வர்த்தகரீதியாக எந்த வித அம்சங்களும் இல்லாமல் கதையை நம்பி எடுக்கப்படும் படம் தமிழ்சினிமாவில் அத்திப் "பூ" பூப்பது போல எப்போதாவது வரும் அப்படி ஒரு படம் தான் அறம். மரத்தை சுத்தி டுயட் கவர்ச்சி நடனம் கவர்ச்சி உடைகள் சதை பறந்து பறந்து சண்டை ஒரே சமயத்தில் பத்து கார்கள் மோதுவது, 100 க்கும் மேற்பட்ட வெள்ளை சட்டை, வேட்டி போட்ட குண்டர்கள், அலறவைக்கும் இசை இப்படி எதுவும் இல்லாமல் உங்களை இருக்கையில் கட்டி இழுக்கும் படம் தான் அறம்.
.jpg)
காட்சிக்கு காட்சி என்ன நடக்கும் என்று நாற்காலி நுனிக்கு வரவைக்கிறார் இயக்குனர் கோபி தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மிரட்சியா? என்று வியக்கும் அளவுக்கு மிக சிறந்த திரைக்கதை உலக தரம் வாய்ந்த படம் இந்த பட தான் உண்மையில் ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் படம் பல நூறு கோடிகள் இல்லாமல் புதுவித தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு அசல் தமிழன் சாதனை என்றும் சொல்லலாம் அயல் நாட்டு கலைஞர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழர்களால் உருவானது.
.jpg)
இந்த படத்தின் இயக்குனர் கோபி தமிழ் சினிமாவில் மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளானவர். ஆம் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் இவருடையது என்று இவர் கோர்ட் வரை போயும் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கான பல மடங்கு பேர் புகழ் இந்த படம் மூலம் இவருக்கு கிடைத்து இருக்கு ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்கள் பாராட்டும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
.jpg)
சரி... இப்போ படத்துக்கு வருவோம்... நயன்தாரா அறிமுக நடிகை சுனுலக்ஷ்மி இதுவரை சின்ன கதாபத்திரத்தில் நடித்த ராம் கதையின் நாயகனாக காக்கா முட்டை சிறுவன் ரமேஷ், மற்றும் விக்னேஷ் சிறுமி தன்ஷிகா வேலா ராம மூர்த்தி கிட்டி பழனி பட்டாளம் நட்சத்திர பட்டாளம் காட்சிக்கு காட்சி தங்களது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
படத்தின் கதை... ஆழ் குழாய் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்து விடுகிறது அந்த குழந்தையை எப்படி காபற்றுகிரார்களா இல்லையா என்பது தான் கதை. திரையில் நாம் இதுவரைக்காணாத சென்னைக்கு வடக்கே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மோசமாக உள்ள கிராமமான காட்டூர், ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகில் உள்ளது. விவசாயம் பொய்த்துப் போனதால் கிராம மக்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த கிராமத்தில், பெயின்ட்டிங் வேலை செய்யும் கணவன், அவர் மனைவி சுமதி, நீச்சலில் அபாரமான திறமை கொண்ட மகன், நான்கு வயது மகள் என ஒரு குடும்பம். சுனுலட்சுமி காட்டு வேலைக்குச் செல்லும்போது தன் நான்கு வயது மகள் தன்ஷிகாவையும் உடனழைத்துச் செல்கிறாள். எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை, அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது. மீட்புப் பணியில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியர் மதிவதனிக்கு (நயன்தாரா) அதிகார மட்டத்தில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எதிர்ப்பை எப்படிக் கையாள்கிறார், அவரது முயற்சி பலனளித்ததா, குழந்தையை மீட்டாரா என்பதே கதை.
.jpg)
ஒருபக்கம் குழந்தையை எப்படியாவது காப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் நயன்தாரா ஒரு பக்கம், போதிய வசதி இல்லாதால் அலட்சிய போக்கு காமிக்கும் அதிகாரிகள், ஒரு பக்கம் அரசியவாதிகளில் குறுக்கிடு இவை அனைத்தையும் மீறி இந்த குழந்தையை எப்படி காப்ற்றுகிறார் நயன்தாரா என்பது தான் மீதி கதை.
‘மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக் கூடாது’, ‘டாக்டர், தண்ணீர் தாகமே எடுக்காத அளவு சொட்டு மருந்து எதுனா இருந்தா குழந்தைக்குப் போட்டு விடுங்க’ காலம் காலமா சோறு போட்ட நிலம் கைல இல்ல.. "தாகமெடுத்து சாவுறாத தடுக்குறதுக்கு இந்த உலகத்துல என்னமா மருந்து இருக்கு?".. "என்னைக்கு வாட்டர் பாட்டல் வந்ததோ அன்னைக்கு ஆரம்பிச்சதுமா இந்த தண்ணி பிரட்சனை" போன்ற ஏராளமான அரசியல் விமர்சன வசனங்கள் க்ளாப்ஸ் அள்ளுது... மீட்புப் பணிக்குக் கயிற்றை எடுத்து வரும் தீயணைப்பு வீரர்களைப் பார்த்து, ‘அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற நவீன மெஷினை பாருங்கப்பா’ என்று கிண்டல் செய்யும் வசனம் எண்ணெய்க் கழிவை வாளியால் அள்ளிய சம்பவத்தை நினைவூட்டுகிறது.
.jpg)
இதுவரை கவர்ச்சியாகவும் காமெடியாக பார்த்த நயன்தாராவை இரு கரம் கூப்பி மரியாதை செலுத்தும் அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நிச்சயம் இந்த கதாபாத்திரம் ஏற்று நடித்த நயன்தாரா மீது மரியாதை அதிகமாகவிட்டது. நயன்தாராவின் மிடுக்கான தோற்றம், நடை, உடை எல்லாமே ஒரு நிஜ மாவட்ட கலெக்டராக நம் கண்ணுமுன்னே வந்ததுபோல ஒரு பிரமிப்பு.
.jpg)
படத்தின் அடுத்த ஆணிவேராக சுனு லக்ஷ்மி புதுமுகம் என்றாலும் பல நூறு படங்கள் பண்ண ஒரு அனுபவம் போல தன் நடிப்பில் வெளிபடுத்தியுள்ளார். ஒரு நகர்புற பெண் இப்படி ஒரு கிராமப்புற பெண்ணாக மாறி தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பது தமிழ் சினிமாவுக்கு ஈண்டும் ஒரு ஷோபா கிடைத்தது போல இருக்கு அழஊதமான நடிப்பு தன் குழந்தை எப்படியாவது காப்ற்றுங்கள் என்று கதறும் போதும் சரி, தன் குழந்தை காணவில்லை என்று தேடும் போதும் சரி நடிப்பில் நம் கண் முன்னே நிற்கிறார். ராம் பல படங்களில் சின்ன சின்ன கதாபத்திரத்தில் நடித்தவர் குறிப்பாக அடியாளாக வந்தவர், இந்த படத்தில் ஒரு முழு நீள பாத்திரம் அதை இகவும் சிறப்பாக நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலே பின்னியெடுக்கும் ராம் இந்த படத்தில் தன்சிகா அப்பாவாக நடித்துள்ளார்.
.jpg)
காக்கா முட்டை ரமேஷ் மற்றும் விக்னேஷ், சிறுமி தன்சிகா என எல்லோரும் மிக சிறந்த நடிப்பை வெளிபடுதியுள்ளனர். இயக்குனர் கோபி நைனார் எடுத்த கதை களம் முற்றிலும் புதுமை ஒரு சோசியல் கதையை இப்படி கமர்சியலாக கொடுத்து வெற்றியடையும் என்று நிரூபித்துள்ளார். "அறம் தமிழ் சினிமாவில் அல்ல இந்திய சினிமாவின் மைல் கல்"
