nayanthara watching aram in fans
நடிகை நயன்தாரா நடித்து நேற்று வெளியான 'அறம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியராக ஹீரோக்களுக்கு இணையாக நடித்துள்ளார் நயன்தாரா என்று அவரை பல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் அரசியல் தலைவர்களை எதிர்ப்பது போல பல வசனங்கள் இடம்பெற்ற போதிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது.
எந்த ஆடல், பாடலும் இல்லாமல் சமூகக் கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் , சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார் இயக்குனர் கோபி நயினார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீர் என, இந்தப் படத்தை பார்ப்பதற்கு காசி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுதார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் கெட்டப்பிலேயே படத்தையும் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
