nayanthara visit in temple with vignesh sivan
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது கோலிவுட் திரையுலகில் பல வருடங்களாக கிசுகிசுக்கப்படும் ஒன்று. இருவரும் படப் பிடிப்புகள் இல்லாத நாட்களில் ஒன்றாகச் சேர்ந்து வெளிநாடுகளில் சுற்றுவதைத் தான் இத்தனை நாட்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தற்போது சென்னை பகுதிகளிலும் இருவரும் இணைந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோவிலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்காக இந்து மதத்தைப் பின்பற்றும் வகையில் நயன்தாரா குடும்ப குத்துவிளக்கு போல் நெற்றியில் பொட்டு வைத்து திருநீறு பூசிக்கொண்டு இந்தப் புகைப்படத்தில் இருப்பதால்... விரைவில் இவர்கள் திருமண பந்தத்திலும் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
