கண்ணாடி மாளிகை போன்ற அமைப்பில் போடப்பட்ட பிரமாண்ட மணமேடையில் நயன்தாரா விக்கி திருமணம். வைரலாகும் வீடியோ இதோ...
பல வருடங்களாக கோலிவுட் வட்டாரத்தில் நயன் - விக்கி திருமணம் குறித்த தீ பரவி வந்த நிலையில் அதற்கு இன்று ஒரு விடை கிடைத்தது. நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் பூத்த நயன்- விக்கி காதல் மொட்டு இன்று மணமேடையில் மலர்ந்தது. ஏற்கனவே இரு முறை காதல் தோல்விகளை சந்தித்த நயனுக்கு ஆறுதலாய் வந்த விக்னேஷ் சிவனின் காதல் வாழ்நாள் முழுதும் தொடர பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சமீபத்தில் பிஸ்னஸ் பார்ட்னர்களான நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு இந்த ஜோடியின் திருமணம் குறித்த பேச்சு தான் எங்கும். முன்பே அரசால் புரசலாக இவர்களது திருமணம் குறித்த தகவல் கசிந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விக்கி திருமண தேதியை உறுதி செய்தார். இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ் தமிழக முதல்வருக்கும் வைக்கப்பட்டது.

மூன்று நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மெகந்தி, சங்கீத்தை தொடர்ந்து இன்று காலை திருமண வைபோகம் நடைபெற்றது. ஐந்து புரோகிதர்கள் மந்திரம் ஓத உற்றார், நண்பர்கள் என பலரின் ஆசிகளுக்கு இடையே நட்சத்திர ஜோடிகள் தங்கள் மண வாழ்விற்குள் அடி எடுத்து வைத்தனர்.

வெஸ்டர்ன் ஸ்டைலில், சிகப்பு நிற மின்னும் சேலையில்.. கழுத்தில் பச்சை கல் பதித்த வைர மாலை கழுத்தை முழுதும் ஆக்ரிமித்துள்ளது. மிக நீள கண்ணாடி வடிவில் போடப்பட்ட மண மேடைக்கு வந்த மணமக்கள் விருத்தினர்களை வணங்கிய வண்ணம் வரும் கண்கொள்ளா காட்சி அடங்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கண்ணாடி மாளிகை போன்ற அரங்கு பல லட்சங்கள் செலவு செய்து அமைக்கப்பட்டது. மணமேடை குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
