லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இந்தவருட புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா. அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியதால் கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நயன்தாரா நடித்து முடித்து விடுவார் என பார்த்தால், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அதே போல் டீ நிறுவனம், அழகு கலை பொருட்கள், திரைப்படங்கள், என பல்வேறு நிறுவனங்களில் பணத்தை இன்வெர்ஸ் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

 எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதனை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதை கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா... இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கூட காதலருடன் தான் கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்றை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், சிதன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் நயன்தாரா கருப்பு நிற டைட் டீ - ஷர்ட் அணிந்துள்ளார். மேலும் தன்னுடைய காதலரை காதல் பார்வையால் விழுங்குவது போல் பார்த்து ரொமான்ஸ் பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்துள்ளார் விக்கி. இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் துபாயில் இருவரும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். துபாயில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு அருகில் நின்றபடி இருவரும் பகிர்ந்து கொண்ட புத்தாண்டு வாழ்த்து செம வைரலாகி வருகிறது.

View post on Instagram