கோலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா லவ் மேட்டர். சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல. முதலில் “வல்லவன்” படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வசப்பட்டார் நயன்தாரா. ஜோதிகா - சூர்யா மாதிரி அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சிம்பு-நயன் அந்தரங்க படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.  அவற்றை எல்லாம் சிம்பு தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சிக்கலை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்தார். 

அதன்பின்னர் பிரபுதேவா - நயன்தாரா காதல் கதை ஊர் அறிந்த செய்தி. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவாவை மணப்பதற்காக மதம் மாறி காத்திருந்தார் நயன்தாரா. ஆம்... கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவா - நயன்தாரா திருமண ஏற்பாடுகள் கூட மும்பையில் நடைபெற்று வந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரபுதேவா நயன்தாராவை  பிரிந்தார். 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

 2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவிருந்த படம் “கருப்புராஜா வெள்ளை ராஜா“. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை பிரபுதேவா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  இப்படி அடுத்தடுத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க:  உச்சகட்ட கவர்ச்சி... 39 வயதிலும் குட்டை உடையில் அட்ராசிட்டி செய்யும் கிரண்...!

ஏதாவது ஒரு கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்து கொள்ள நயன்தாரா, விக்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் பரபரப்பு இல்லாத இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தை சரியாக பயன்படுத்தி திருமணத்தை நடத்தி முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நயனின் கைவசம் 3 படங்கள் தான் உள்ளன. “மூக்குத்தி அம்மன்” படத்தில் நடித்து முடித்துவிட்டார். “காத்து வாக்குல இரண்டு காதல்”, “நெற்றிக்கண்” ஆகிய படங்கள் தான் பாக்கி. அதில் நெற்றிக்கண் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் திரைப்படம், “காத்து வாக்குல இரண்டு காதல்” விக்கி இயக்க உள்ள திரைப்படம். அதனால் தான் நயன் - விக்கி ஜோடி திருமணத்திற்கு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.