அறம் படத்தின் வெற்றிக்குப் பின், தானே கதை கேட்டு, தானே முடிவெடுக்க ஆரம்பித்தார் நயன். பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தன அவை. ஆனால் அவ்வளவு உஷார் தனமும் எங்கிட்டு போச்சு என்று அவரது தீவிர ரசிகர்களே நினைக்கிற அளவுக்கு போய்விட்டது நிலைமை.

தனக்கு முக்கியத்துவமில்லாத கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்த நயன்தாரா பிகில் படத்தில் எப்படியோ ஏமாந்துவிட்டார். தன்னை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம் என்கிற வருத்தம் கூட இருக்கிறதாம் அவருக்கு. அதையெல்லாம் தர்பார் படத்தில் சரிகட்டி விட்டதுதான் நயனின் உஷார் மூளை.

கேமிராமேன் தயவில் ஒரு தேவதை போல காட்டப்பட்டுள்ளாராம் அவர். இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே கேமிராமேனிடம் இது குறித்து அவர் பேசியதாகவும் தகவல். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கொஞ்சம் அசந்தா பேக் பண்ணிடுவாங்க போல!

அப்புறம் இன்னொரு விஷயம். நயன்தாரா தான் நடிக்க போகும் கதையை பொறுமையாக கேட்டுக் கொள்கிறாராம். கேட்டு முடித்தவுடன் தயாரிப்பாளர், இயக்குநரின் ஜாதகத்தை வாங்கி வைத்துக் கொள்கிறாராம். தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அந்த ஜாதகத்தை கணித்து விட்டு சரியாக இருந்தால் மட்டுமே அந்தப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடுகிறாராம் நயன்தாரா. பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணுக்கு ஆன்மீகத்தை கண்ணை மூடிக்கிட்டு நம்புது. ஆனால் விக்னேஷ் சிவன் விஷயத்தில் மட்டும் நயன்தாரா ஜாதகம் சடங்கு பார்ப்பதேயில்லை.