கோலிவுட் திரையுலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா... பிரபு தேவாவின் காதல் பிரிவிற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது. 

ஆனால் இதுவரை இவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக கூறவில்லையே தவிர, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

காதலை உறுதி செய்த நயன்தாரா:

இந்நிலையில் நயன்தாரா விருது பெரும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். இவர் விருதை பெற்றுக்கொண்ட போது... இந்த விருது பெற காரணமாக இருந்த என் அப்பா, அம்மா, சகோதரர் மற்றும் காதலருக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

மேலும் இந்த விருது வழங்கும் விழா தனக்கு மிகவும் வித்தியாசமானது என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். 

இதுவரை இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்த நயன்தாரா முதல் முறையாக அதுவும் வெளிப்படையாக தன்னுடைய காதலருக்கும் நன்றி என தெரிவிதுள்ளது விரைவில் இவர்கள் திருமணம் செய்ய உள்ளதை உறுதி படுத்தியுள்ளது.