நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள பத்தி படமான 'மூக்குத்தி' அம்மன் படத்தில் நடிப்பதற்காக, அசைவ உணவுகளை தவிர்த்து... சைவ உணவுகள் மட்டுமே உண்டு, விரதம் இருந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான, 'ஸ்ரீ ராம ராஜ்ஜியம்' படத்தில் சீதை வேடத்தில் நடித்திருந்தார். இதற்காக இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து, அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தார். இவரின் செயல் பலரையும் வியக்க வைத்தது.

இதை தொடர்ந்து, அடுத்ததாக நயன் நடிக்க உள்ள படங்களில் ஒன்றான 'மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளார். பத்தி படமான இந்த படத்தில் நடிப்பதற்காக 8 வருடங்களுக்கு பின், நயன்தாரா மீண்டும், முழுமையாக அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் எடுத்து இருந்து நடிக்க உள்ளாராம்.

நயன்தாராவின் தொழில் பக்தியும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக இவர் செய்யும் இது போன்ற செயல்கள் கோடம்பாக்கத்தையே மெய் சிலிர்க்க வைத்துள்ளது.