நடிகை நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும், ரசிகர்கள் மத்திய நல்ல அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பல படங்களில் கதையின் நாயகியாக அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, மாயா, கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்தது.

அந்த வகையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், பக்தி பரவசத்தோடு உருவாகி வருவதாக கூறப்படும் 'மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அணைத்தும் முடித்துவிட்ட நிலையில் படக்குழுவினர், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் இந்த படம் குறித்தும், நயன்தாரா எந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு நடித்தார் என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நயன்தாரா இந்த படத்திற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து நடித்தார்.   அவருடைய இந்த தொழில் பக்தியை பார்த்து நான் உண்மையிலே ஆச்சரியமடைந்தேன். ’மூக்குத்தி அம்மன் கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முழு சிரத்தை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 50 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்த ஆர்ஜே பாலாஜிக்கு தான் பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.