Asianet News TamilAsianet News Tamil

'விஸ்வாசம்' படத்தில் நடித்த நினைவுகள் மறக்கமுடியாதது..! விவேக் குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் விவேக் மரணம் குறித்த நினைவுகள் மறக்க முடியாதது என, நயன்தாரா பதிவிட்டுள்ளார்.
 

nayanthara say condolence twit for actor vivek
Author
Chennai, First Published Apr 18, 2021, 7:58 PM IST

நடிகர் விவேக் மரணம் குறித்த நினைவுகள் மறக்க முடியாதது என, நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக்  மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே விவேக்கின் உடல் நிலை மோசமாக இருந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

nayanthara say condolence twit for actor vivek

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 59 வயதே ஆன விவேக் திடீரென மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்த செய்தியை கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

nayanthara say condolence twit for actor vivek

பத்மஸ்ரீ விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரது கலை சமூக சேவையை கௌரவிக்கும் விதமாகவும், அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை செய்து, மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் விவேக்குடன் ஒரு சில படங்களில் நடித்துள்ள நயன்தாரா விவேக் குறித்து நிகிழ்ச்சி பதிவு ஒன்றிய போட்டுள்ளார்.

nayanthara say condolence twit for actor vivek

அதில்... விவேக் அவர்களுடன் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். குறிப்பாக ’விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய போது அவருடன் இருந்த அற்புதமான நினைவுகளை என்னால் மறக்க முடியாதது என தெரிவித்துள்ளார். அதை நினைத்து நான் எப்போதும் மகிழ்வேன். அவர் இவ்வளவு சீக்கிரம் சென்று விட்டார் என்பதே என்பதை நம்பமுடியவில்லை. வாழ்க்கை என்பது எப்படி கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த இழப்பை எதிர்கொள்ள அவர்களுக்கு கடவுள் தேவையான பலத்தை அளிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios