அட்லி, விஜய் காம்பினேஷனில் பரபரப்பாக வளர்ந்துவரும் ‘தளபத் 63’ படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்ளும் காட்சிகளை விஜய் ரசிகர்கள் சிலர் வலைதளங்களில் பகிர்ந்துள்ளது வைரலாகிவருகிறது. விஷேசமாய் சொல்லிக்கொள்ள எதுவுமில்லாத அந்த 12 செகண்ட் வீடியோதான் இப்படி பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய்  நடித்துவரும் ’தளபதி 63’ திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக நயன்தாரா  நடித்து வருகிறார். அதோடு அட்லீ- விஜய் காம்போவில் வெளியான முந்தைய படங்களில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர்.மேலும் விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படம் உருவாகி வருகிறது.  மேலும் 'தளபதி 63’ திரைப்படத்தின் பாடல், சண்டை உள்ளிட்ட படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டன. இந்நிலையில்,  'தளபதி 63' திரைப்படத்தின் நாயகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தோன்றும் பகுதிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்துவருவதால் நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும் நாட்களில் விஜயை விட நயனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டு வருகிறதாம்.