nayanthara replace shruthihassan place
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், பாகுபலி திரைப்படத்தை போல் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் 'சங்கமித்ரா'. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்க உள்ளனர். கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழுவினருக்கு ஸ்ருதிஹாசனுக்கு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீர் என இந்த படத்தை விட்டு முழுமையாக விலகுவதாக கடந்த இரண்டு வாரத்திற்கு முன் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாகியை தீவிரமாக தேடி வந்த படக்குழுவினர். நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரையே ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
