நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளதால், இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என நயன்தாரா கூறி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை பிரம்மாண்ட படமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.  இந்த நாவலை படமாக எடுக்க நினைத்த பலரால், அது முடியாமல் போனது. எனவே மணிரத்னம் இயக்க உள்ள இந்த படத்தின் மீது பலருக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'பொன்னியின் செல்வன்'  படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான குந்தவை, நந்திதி, ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். 

ஐஸ்வர்யா ராய் சோழ ராஜ்யத்தை பழிவாங்கும் கதாப்பாத்திரமான நந்திதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும்  மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்திற்காக நடிகை நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் நயன்தாரா ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் இப்படவாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இது குறித்து எந்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.