இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் பாண்டிச்சேரி வந்துள்ள நிலையில், நயன்தாராவை பார்க்க அவர் தங்கியுள்ள ஓட்டல் முன் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் பாண்டிச்சேரி வந்துள்ள நிலையில், நயன்தாராவை பார்க்க அவர் தங்கியுள்ள ஓட்டல் முன் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் புதுவை சென்றுள்ளனர்.

சுமார் ஒருவார காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை காண அவரது ரசிகர்கள், நயன்தாரா தங்கி இருக்கும் தயார் சொகுசு ஓட்டல் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்புக்காக வெளியே வந்த நயன்தாரா, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி காரில் ஏறி சென்றார். மேலும் காரின் உள்ளே இருந்து கொண்டு, ரசிகர்களுக்கு வணக்கம் கூறினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ’ரெண்டு காதல்’ சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, மேலும் இரண்டாவது சிங்கள் பாடல் அடுத்த மாதம் வெளியாகும் என விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தை முடித்த கையேடு... படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Scroll to load tweet…