தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் நம்பர் ஒன் நடிகையாக தொடர்ந்து கொடி பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் நயன்தாரா அடுத்த ஆண்டில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்று மிக நம்பகமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக தொடர்ந்து பிசியாக இருந்துவரும் நயன் தற்போது ஹீரோயின் சப்ஜெக்டுகளில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அவரது சம்பளமும் 2 கோடிக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உதவியுடன் படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் கேமரா, எடிட்டிங் போன்ற தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டிவருகிறார் நயன். எனவே அவர் இயக்குநராகும் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் நயனின் உதவியாளர்கள்.