ஏற்கனவே கஜினி, ஆதவன், மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது நான்காவது முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தான் நடிகை நயன்தாராவை, கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

நயன்தாரா தற்போது விஜய் 63 , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'தர்பார்' ஆகிய படங்களில் நடித்து பிஸியாக நடித்து வருகிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளையும் கேட்டு வருகிறார். சில தெலுங்கு படங்களில் இவரை நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் இவரை சூர்யா படத்திலும் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா சூர்யாவுடன் இணைந்து நடித்தால், நான்காவது முறையாக சூர்யாவியுடன் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.