நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கலெக்டராக நடித்து வரும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கையும் அந்த படத்தின் பட குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய க்ரைம் நாவலின் தலைப்பான 'கொலையுதிர்க்காலம்' என்பதுதான் நயன்தாராவின் அடுத்த பட டைட்டில். 

இந்த படத்தின் ஒரு சர்ப்பரைஸ் என்னவெனில் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். அவர் ஆரம்பித்துள்ள ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல்படம் இதுதான் என்பதும் இந்த படத்திற்கு அவர் இசையமைக்கவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை 'உன்னை போல் ஒருவன்', பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரிடோலட்டி இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் நயன்தாராவின் வாயை ஒரு முரட்டுக்கை அழுத்தி பிடித்துள்ளதால் இதுவொரு திகில் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.