Asianet News TamilAsianet News Tamil

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! சற்று முன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட சூப்பர் தகவல்!

நயன்தாரா நடித்து முடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் இன்று மதியம் வெளியாகும் என விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

nayanthara netrikan movie trailer release today
Author
Chennai, First Published Jul 29, 2021, 11:01 AM IST

நயன்தாரா நடித்து முடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் இன்று மதியம் வெளியாகும் என விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை... அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara netrikan movie trailer release today

விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 12 .15 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nayanthara netrikan movie trailer release today

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையிலும், 3 ஆவது அலை தலை தூக்க கூடாது என முன்னெச்சரிக்கையோடு மத்திய - மாநில அரசுகள் கூடுதல் கவனத்தோடு செயல்படும் நிலையில், இதுவரை திரையரங்கு திறப்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. எனவே திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படங்கள் கூட அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது.

nayanthara netrikan movie trailer release today

ஏற்கனவே நயன்தாரா நடித்த, 'மூக்குத்தி' அம்மன் திரைப்படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இவர் நடித்துள்ள இந்த படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா கண் தெரியாதவராக நடித்திருக்கும் இப்படம், சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'நெற்றிக்கண்' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் திடீர் என வெளியாகியுள்ளது நயன்தாரா ரசிகர்களளை குஷியாக்கியுள்ளது .


 

Follow Us:
Download App:
  • android
  • ios