Nayanthara mother in law angry against his activities

அறம்- பட ஹிட்டுக்குப் பிறகு தென்னிந்திய சினிமா உலகில் நயன் தாராவின் கொடி ஏகத்துக்கும் உயரத்தில் பறக்கிறது. கெட்ட கிளாமர் பொண்ணாக நடித்தவர் இப்போது கேரக்டர் ரோலில் கிளப்பிக் கொட்டியிருப்பதை பார்த்து சீனியர் ஹீரோயின்கள் ஆளாளுக்கு அரண்டு கிடக்கிறார்கள். 

ஆனால் என்னதான் ஊருக்கு அவர் நயன் தாரா என்றாலும், மாமியாருக்கு ஜஸ்ட் மருமகள்தானே!...ஆக நயனையும் பிடித்தாட்டுகிறதாம் மாமியார் பிரச்னை.

அதாவது நயனும், அவர் லவ்ஸோ லவ்ஸென லவ்ஸூம் விக்னேஷ் சிவனும் தனி வீட்டில் வசிக்கிறார்களாம். ‘லிவ்விங் டுகெதர்’ என மிரட்சியாய் சொல்லுமளவுக்கெல்லாம் இப்போது இந்த விஷயம் பெரிதில்லை. குப்பனும் - குப்புனியும் கூட லிவ்விங் டுகெதரில் இருக்கையில் நயனும் - சிவனும் இப்படி இருப்பதில் ஆச்சரியமென்ன? 

இருவரும் தனியே வாழ்ந்த வரையில் விடிந்தது முதல் அடைவது வரை அஹ, ஆஹ, ஆஹா, ஆஹஹஹா! என ஒர்ர்ர்ர்ரே ரொமான்ஸ் மழைதான் வீட்டுக்குள். ஆனால் சமீபமாக சிவனைப் பெற்றவரும் அந்த வீட்டில் வந்து தங்கிவிட்டாராம். 

நயனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். அதாவது காரில் போகும்போது தனது காலுக்கு கீழே ஒரு சுத்தமான டர்க்கி டவலை போட்டு அதில் தனது காலை வைத்துக் கொள்வாராம். ஆனால் நயனின் வருங்கால மாமியாருக்கு அது பிடிக்கவில்லையாம். இரண்டு மூன்று முறை எடுத்து வெளியே வீசிவிட்டாராம் டவலை! 

கொஞ்சம் பொறுத்துப் போன நயன், இந்த டார்ச்சர் ஓவராகிக் கொண்டே போனதால் சமீபத்தில் ஒரு நாள் மாமியாரை பிடித்து தாளித்து தள்ளிவிட்டார் என்கிறார்கள். 

நயனுக்கு வந்த சோதனை!