ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். 

படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நயன்தாரா முழுக்க முழுக்க அம்மனாகவே அவதாரம் கொடுத்த போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: அஜித்துடன் ‘ரெட்’ படத்தில் நடித்த நடிகையா இது?... 43 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்கும் போட்டோ...

நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன், புனித அப்பத்தை புசிப்பேன் ஆனால் ஒரு போதும் ஆடி மாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன் என்ற வசனத்துடன் தொடங்கும் போதே டிரெய்லர் சூடு பறக்க ஆரம்பிக்கிறது. “தமிழ்நாட்டில் மட்டும் தான் மதத்தை வச்சி ஓட்டு வாங்க முடியல?... அதை இன்னும் 5 வருஷத்தில் நான் நடத்திக் காட்டுவேன்” என்பதில் தொடங்கி, மனோ பாலா செய்யும் பவர் காமெடி காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது மத அரசியலை படம் பேசியிருப்பது நன்றாக தெரிகிறது. சம கால பிரச்சனையான நீட் குறித்தும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

நயன்தாராவின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியான போது ரசிகர்கள் பலரும் அம்மன் ஹேர் கலரிங் எல்லாம் பண்ணியிருக்கு என கலாய்த்தனர். அதற்கான விடையை டிரெய்லரில் வைத்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி அம்மனை பார்த்து உங்கள் தலைமுடி ஏன் செம்பட்டையாக இருக்கு என்று கேட்க அவரோ, கண்ட தண்ணியில அம்பிஷேகம் செய்தால் இப்படித் தான் ஆகும் என பதிலளிப்பது செம்ம காமெடியாக இருக்கிறது.