காதல்:

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிகை நயன்தாரா நடித்த போது , விக்னேஷ் சிவனுக்கும் நயந்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதலை இந்த படத்தின் நடித்த பிரபலங்கள் பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய காதல் குறித்து எதுவும் கூறாமல் மௌனம் சாதித்து வந்தனர்.

ரகசிய நிச்சயதார்த்தம்:

இந்நிலையில் நடிகை நயந்தாராவிற்க்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நயன்தாரா, தன்னுடைய வருக்கால கணவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.

திருமணம்:

தற்போது இவர்களுடைய திருமணம் குறித்து கிசுகிசுக்கப்படுவது என்னவென்றால்... இப்போதைக்கு நயன்தாரா 'கொலையுதிர் காலம்' , 'கோலமாவு கோகிலா' , 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் தமிழிலும், தெலுங்கில் ஒருபடத்திலும் நடித்து வருகிறார்.  மேலும் தற்போது தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் 'விசுவாசம்' படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து பல படங்களில் நடிப்பதால், தற்போது கமிட் ஆகியுள்ள படங்களை நடித்து கொடுத்துவிட்டு, நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் திருமணத்திற்கு பின் நயன்தாரா திரையுலகை விட்டு விலகும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.