நயன்தாராவுடன் இந்த வருட காதலர் தினத்தை செம்ம ரொமான்டிக்காக கொண்டாடினார் விக்னேஷ் சிவன் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். குறிப்பாக நயனை காதலிக்க துவங்கி 5 வருடம் ஆகிவிட்டது. அனால் இந்த 5 வருடம் போனதே தெரிய வில்லை என்றும், தங்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான் பொங்கி வழியும் காதலோடு, லவ்வர்ஸ் டே சிறப்பாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதை பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டனர் நயன் ரசிகர்கள். 'நானும் ரௌடிதான்' படத்தின் போது சாதாரணமாக பேசி பழகிய இவர்களுக்குள் மலர்ந்த காதல், வெற்றிகரமாக 5 விருதை எட்டியுள்ளது. இருப்பினும் எப்போது திருமணம் என்கிற கேள்வியை கேட்டல் மட்டும் செம்ம ஸ்பீடாக எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஒரு நாள் லீவு போட்ட குத்தம்! மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்ச குக்கர்! வைரலாகும் வீடியோ...

நயன்தாராவோ... அடுத்தடுத்து திரைப்படம் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஒரு படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனால் தற்போது வரை இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை.

நயன்தாராவை... செல்லம்... தங்கம்... என கொஞ்சி கொண்டே அவர் எங்கு சென்றாலும் கூடவே சென்று கொண்டிருந்த விக்னேஷ் சிவன், தற்போது நயன்தாரா செல்ல முடியாத இடத்திற்கு சென்றுள்ளார்.

சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு, சன்னிதானத்தில் நின்றபடி இவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.