இதுவரை முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க மட்டுமே சம்மதம் தெரிவித்து வந்த நடிகை நயன்தாரா முதல் முறையாக வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை, தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றதும், தான் நடிக்கும் படத்தின் கதைகளை  கூட தனித்துவமாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' முன்னணி நடிகர்கள் படத்திற்கு நிகராக வசூல் சாதனை படைத்தது.

விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி, என முன்னணி நடிகர்கள் படங்களை தேர்வு செய்து நடித்த நயனின் பார்வை முதல் முறையாக இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா மீது பட்டுள்ளது. 

அதாவது, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ்ப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இந்த தகவல் உறுதியானால் என்றும் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.