நயன்தாரா கழற்றி விட்டதால் அவரது ஆண் நன்பர் தற்போது நடிகை சமந்தாவிடம் தஞ்சமடைத்து இருக்கிறார். 

நடிகை நயன்தாராவின் ஆடிட்டராக இருந்து அவரது நம்பிக்கையையும், அன்பையும் ஒருசேரப் பெற்றவர் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ். அறம், ஐரா ஆகிய இரண்டு படங்களை நயன்தாராவை வைத்து தயாரித்தவர்.

கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் தமிழக விநியோகஸ்தரும் கூட. இவரது முதுகெலும்பே நயன்தாராதான் என்று ஊர் உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், சமந்தாவை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார் ராஜேஷ். இனி நயன்தாரா உங்க பேனரில் நடிக்க மாட்டாரா? என ராஜேஸை பாடாய் படுத்துவிட்டார்கள் நிருபர்கள்.

“மேடம் எப்ப தேதி கொடுத்தாலும் அறம்- 2 வரும். அதுக்கு முன்னால் சமந்தா படம் தயாரிக்கிறேன். இந்த புராஜக்ட் இப்போ துவங்கினது இல்லை. அறம் சமயத்திலேயே பேசி வந்ததுதான்” என்கிறார். “எனக்கும் நயன்தாராவுக்கும் எவ்வித புகைச்சலும் இல்லை” என்று சப்பை கட்டு கட்டியதை வேறு தனியாக சொல்ல வேண்டுமா என்ன? காத்தாடி ஓடும் திசையிலேயே கயிறும் ஓடினால்தான் ரெண்டுக்கும் மரியாதை என்பதை அறியாதவரா ராஜேஷ்?