கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டு, ரஜினியின் முருகதாஸ் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதித்திருப்பது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஏன் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலங்களில் மிக அதிகமான படங்களில் நடித்துவரும் நயன் தாரா சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர்-கமல் காம்பினேஷனான ‘இந்தியன் 2’வில் கமிட் ஆகிவிட்டு உடனே பின் வாங்கினார். அப்படிப் பின் வாங்கியதற்கான காரணத்தை நயன் வெளியிடவில்லை.

இந்நிலையில் ரஜினி-ஏ.ஆர். முருகதாஸின் காம்பினேஷனில் விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் நாயகியாக நயன் கமிட் ஆகியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி கமல் ரசிகர்களை உசுப்பேற்றியுள்ள நிலையில் ‘இந்தியன் 2’ படம் எப்போது துவங்கி எப்போது முடியும் என்று தெரியாது. பெரிய அளவில் தனது கால்ஷீட் வீணடிக்கப்படும். ஆனால் முருகதாஸ், ரஜினி படமோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிந்துவிடும் என்று நம்பியதாலேயே நயன் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் கமல் இன்னும் ‘இந்தியன் 2’ படத்துக்கு மொத்தமான தேதிகள் எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.