தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும், நடிகை நயன்தாரா நடித்த படங்களில் அவருக்கே பிடிக்காத கேரக்டர் எது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலர் ஜோடி போட விரும்பும் நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா.  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான, 'அறம்', 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. கதாநாயகர்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்தது. இதனால் நயன்தாராவும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட கதைக்கும், கதாநாயகிக்கும், முக்கியம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர், நடித்த படங்களில் அவருக்கு பிடிக்காத கேரக்டர் எது என்பது குறித்த தகவலை முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

'கஜினி' படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு, இவரின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வேறு விதமாக கதை கூறியுள்ளார். ஆனால் படம் எடுத்து முடித்ததும் அந்த கதாபாத்திரம் வேறு மாதிரி கேரக்டராக பிரதிபலித்துள்ளது.  இதனால் அந்த கேரக்டர் எடுபடாமல் போய்விட்டது என நயன்தாரா கூறியுள்ளார்.  இதனால் அப்போதில் இருந்து இப்போது வரை தனது பிடிக்காதது சித்ரா கேரக்டர் என தெரிவித்துள்ளார்.