nayanthara get the award
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆஸ்தான நடிகையாக மாறிவிட்டார் நயன்தாரா... மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார் .
இவருக்கு தற்போது 'ரெயின் ட்ராப்ஸ்' என்கிற நிறுவனம் சார்பில் பெண் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு காரணமாக அவர் அந்த விருது விழாவில் கலந்துக்கொள்ள முடியவில்லை என நயன்தாரா கூறியுள்ளார்.
இதன் காரணமாக நடிகர் ஜி.வி.பிரகாஷின் தாயாரும், பாடகி மற்றும் இசையமைப்பாளரான எ.ஆர் ரெஹான்னா மற்றும் ரெயின் ட்ராப்ஸ் குழுவினர் அவரை படப்பிடிப்புத் தளத்திலேயே சந்தித்து விருது கொடுத்து கௌரவித்துள்ளனர்.

இந்த விருது குறித்து கூறியுள்ள நயன்தாரா... நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பு காரணத்தால் விருது விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால் இதுபோன்ற நம்பிக்கை வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஆசைப்படுவேன் என தெரிவித்துள்ளார்...
எனக்கு இந்த விருது கொடுத்ததற்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.

