nayanthara fullfilled sivakarthikeyan dream

தமிழ் சினிமா தற்போது அனைத்து முன்னணி கதாநாயகர்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். ஆனால் அவரோ முன்னணி கதாநாயகன் படத்தில் நடிப்பதை விட அவருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான டோரா படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ரசிகர்கள் சற்று இடமாற்றம் அடைந்ததாகவே கூறப்படுகிறது.

 தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளதாம்.

நயன்தாராவிடமே தனக்கு உங்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறாராம்.

இதற்கு முன் பல மேடைகளில் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்பது தனது ஆசை என கூறிய ஜெயம் ரவிக்கும் தனி ஒருவன் படம் மூலம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.