இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'பையா'. இந்த படத்தில் மூலம் பருத்தி வீரன் கார்த்தியை செம்ம ஸ்டைலிஷாக காட்டியவர் இயக்குனர் லிங்குசாமி.

இதுவரை நடித்திராத கெட்டப், ஸ்டைலிஷ் கேரக்டர் என புது விதமாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் 'பையா' கார்த்திக்.

இந்த திரைப்படம் பற்றிய இன்ட்ரெஸ்டிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முதலில் இந்த படத்தில், நாயகியாக முதலில் நடிகை, நயன்தாரா தான் கமிட் ஆகி இருந்தாராம். ஆனால் சம்பள பிரச்சனை மற்றும் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீர் என இந்த படத்தில் இருந்து விலகினார் நயன்.

இதனால் திடீர் என படக்குழு தமன்னாவிடம் கதையை கூற, அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்ததால், சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவா இல்லை, தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என வந்த வாய்ப்பை தட்டி தூக்கினார் தமன்னா.