கடந்த 2019 ஆம் ஆண்டு, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் படத்தில் கெத்து காட்டிய நயன்தாராவுக்கு, இந்த வருடத்தின் முதல் படமே டல் அடித்துள்ளது என நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைந்து நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் மீது, ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பட பிடிப்பு பணி துவங்கிய நாளில் இருந்து, இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்தனர்.

அதிலும் இந்த படத்தில், மாயா, கோலமாவு கோகிலா... போன்ற படங்களில் பெரிய ஹீரோக்களுக்கு நிகராக சிங்கிளாக நடித்து, வசூல் சாதனை செய்த லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.

குறிப்பாக 'தர்பார்' படத்தில் நயன்தாராவின் லுக் வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. எப்படியும் தலைவிக்கு வெயிட்டான ரோல் கொடுத்திருப்பார் ஏ.ஆர்.முருகதாஸ் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார் நயன்தாரா. ஒரே ஒரு பாடலின் அழகு பொம்மை போல் வந்து செல்கிறார். சரி ரஜினிகாந்துடன்  ஜோடி சேர்வாரா? என்று பார்த்தல் அதிலும் ஒரு சஸ்பென்ஸ். அதே போல் நயன்தாராவின் கதாபாத்திரத்தை நிறைவு செய்யாமல் படத்தை கொண்டு சென்றுள்ளதாகவே கருதுகிறார்கள் ரசிகர்கள்.

மொத்தத்தில், தலைவரை மட்டுமே கதை சுற்றுகிறது. அவரை தவிர சில காட்சிகளில் மட்டுமே கேமரா, அக்கம் பக்கம் உள்ள ஆர்ட்டிஸ்டை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொத்தத்தில் ரஜினிகாந்தை மாஸாக காட்டி விட்டு, நயன்தாராவை இப்படி டம்மி பீஸ் ஆக்கிவிட்டாரே என்பது தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன், ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு காரணம்.