தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவரின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகின்றது.

இந்நிலையில் இவர் நடிப்பில் இன்று டோரா படம் திரைக்கு வந்துள்ளது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் டோரா என்று பெயர் வைத்ததாலேயே குழந்தைகளுக்கும் பிடித்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்காக நயன்தாரா ரசிகர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் கட்-அவுட், பேனர் வைத்தனர், சென்னையில் ஒரு படி மேலே சென்று கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் வேறு எந்த நாயகிக்கும் கிடைக்காத கொண்டாட்டம் இவருக்கு கிடைத்துள்ளது. இந்த வரவேற்பு பல நடிகைகளை பொறாமை பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.