நடிக நடிகைகளின் சம்பளப் பாக்கிகள் பெரும்பாலும் இறுதிநாள் படப்பிடிப்புக்கு முன்னதாக வழங்கப்பட்டுவிடுவதுதான் நடைமுறை. ' தர்பார்' படத்தில் நயன்தாராவின் சம்பளப்பாக்கி அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால், பாக்கியைக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என நயன்தாரா முடிவாகச் சொல்லிவிட்டார்.

அன்றையதினம் விடுமுறையானதால் உடனடியாக பாக்கியைக் கொடுக்க முடியாது தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஆனாலும் நயன்தாரா முடிவில் எந்த மாற்றமும் இல்லை.  காலை 9 மணி ஆகியும், அவர் ஹோட்டல் அறையை விட்டு வெளிவரவில்லை. இது குறித்து அறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், எவ்வளவோ கூறியும், நயன்தாரா பிடிவாதம் பிடித்துள்ளார். இதையடுத்து, இன்று பிற்பகலுக்குள் உங்களுக்கு தயாரிப்பாளர் சம்பளப்பாக்கி தரவில்லை என்றால், உங்களது பணத்திற்கு முருகதாஸ் பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

இதனால், 3 மணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அன்று ரஜினியும் டென்சன் ஆகிவிட்டாராம். உண்மையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை என்பதால், பணம் எடுத்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் தரப்பினர் உணர்த்தி இயக்குனர் கூறியதைப் போன்று 3 ஆம் தேதி பிற்பகலில் நயன் தாராவிற்கு சேர வேண்டிய சம்பளபாக்கியை செட்டில்மென்ட் செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:- வேட்டி விளம்பரத்தில் பிரதமர் மோடி... தமிழ்நாட்டின் அடையாளமாக மாறி அசத்தல்..!

பண விஷயத்தில் கரார் காட்டிய நயன் தாராவை இனிமேல், தங்களது படங்களில் கமிட் செய்வதில் கொஞ்சம் லைகா நிறுவனமும் கரார் காட்டும் என்று கூறப்படுகிறது. இறுதியாக பாக்கித் தொகைக்கான பொறுப்பினை இயக்குனர் முருகதாஸ் எடுத்துக்கொள்ள, இருக்கைவிட்டு எழுந்து வந்தாராம் நயன்தாரா.

இதையும் படியுங்கள்: அடம்பிடித்து அசால்ட் காட்டிய மோடி... கண்கள் பனித்து, இதயம் இனித்த ஷி ஜின்பிங்..!