Nayanthara baby: குழந்தை பெற்று கொள்ளும் விஷயத்தில், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகளை பின்பற்றி நயன்தாரா..துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர், சமீப காலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இவரின் மவுஸு கொடி கட்டி பறக்கிறது. இவருக்கு, இளம் பெண்கள் முதல் சிறுவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு, ஏகப்பட்ட நடிகைகள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டனர். ஆகையால், நயன்தாரா முப்பத்தி ஏழு வயசு ஆன பிறகும் திருமணம் செய்து கொள்ளலாம் தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் சுற்றி திரிந்து (living together) முறையில் வாழ்ந்து வருகிறார்.

சில காலங்களாகவே இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதையடுத்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 



நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்:

சமூக வலைத்தளங்களில் , தற்போது எல்லா இடங்களிலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. 

ஒரு புறம், அவர்களுக்கு ஏற்கனவே ரகசியமாக திருமணமாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய கோவிலில் எடுக்கப்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா வீடியோவாகும். அதில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து நயன்தாரா இருந்தார். இருப்பினும், இருவரும் இது தொடர்பான இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தாயாகிறாரா நயன்தாரா..?

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிக்க இருக்கிறாராம். 

இந்நிலையில், ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்து ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால். நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகைகளை பின்பற்றிய நயன்தாரா:

முன்னதாக ஹாலிவுட் நடிகைகள் பலர் தன்னுடைய மவுஸு குறைந்து விட கூடாது என்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவூட் பிரபலங்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர். தற்போது, அந்த வரிசையில் நயன்தாரா இணைந்துள்ளாராம். இந்த செய்தி, இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. 

 மேலும் படிக்க...Samantha: நான் காலேஜ் படிக்கும் போது சூர்யாவின் வெறித்தனமான ரசிகை...நடிகை சமந்தாவின் சுவாரஸ்யமான பதிவு....