தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  

தற்போது முன்னணி கதாநாயகர்களுக்கு நாயகியாக நடிக்கும் படங்களை தவிர்த்து விட்டு,  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

சினிமா உலகில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும்  நயன்தாரா அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

முதலில் இவர் சிம்புவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காதல் முறிந்தது. இதை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை நயன் காதலித்து வந்ததாக பல உறுதியான தகவல்கள் வெளியாகியது.

நயன்தாராவும் தன்னுடைய கையில் பிரபு என்று பச்சை குத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டனர். மேலும் பிரபுதேவாவிற்காக இந்து மதத்திற்கும் மாறினார் நயன் என கூறப்பட்டது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதலும் கைகூடாமல் போனது.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் எதையும் பற்றி யோசிக்காமல் அவருடன் ஜாலியாக  உலகம் சுற்றி வருகிறார் நயன்தாரா. இவர்கள்  ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் நயன்தாரா கண்டு கொள்ளவில்லை. நியூயார்க் நகரில் இருவரும் நிற்கும் விதம் விதமான புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

தற்போது இவருடைய கையில் பிரபு என்று பச்சை குத்தியதை நீக்கிவிட்டு 'பாசிட்டிவிட்டி' என்று வேறு வார்த்தையை பச்சை குத்தி உள்ளார்  நயன்தாரா இவருடைய இந்த மாற்றத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.