நடிகை நயன்தாராவின் நெடுநாள் காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் நேற்று தடபுடலாகக் கொண்டாடப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை நயன் பிறந்தநாள் பரிசுச் செய்தியாக சிவனுக்குச் சொன்னதாகத் தெரிகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்த ‘நானும் ரவுடிதான்’படத்துவக்க காலத்திலிருந்தே, அதாவது கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் வெளிப்படையாகக் காதலித்துவருகின்றனர். விக்னேஷ் சிவன் நயனை விட ஒரு வயது இளையவர் என்றாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வருகின்றனர். தங்களது பார்ட்டி மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணங்களின் படங்களை பொதுவெளிகளில் பகிர்ந்துகொள்ள அவர்கள் எப்போதும் தயங்கியதேயில்லை. சமீபத்தில் விக்கியை தயாரிப்பாளராகவும் உயர்த்திப்பிடித்த நயன் அவரது தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் 34வது பிறந்தநாளை நயன் தனது தோழிகள் புடைசூழ வெகுவிமரிசையாகக் கொண்டாடி அது தொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவரது பதிவில் ❤️Wiki❤️ Birthday blast 💥🤗 Full of Love 💕 This one is so special 😇 என்று பதிவிட்டு அநேக ஆட்டின்களைப் பறக்கவிட்டார். அதையொட்டி நடந்த பார்ட்டியின் முடிவில் மிக முக்கியமான நண்பர்களுக்கு மத்தியில் ‘இனியும் தள்ளிப்போடும் எண்ணமில்லை. இந்த டிசம்பருக்குள் நானும் விக்கியும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்’என்று அறிவித்து சிவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தாராம் நயன்.