Asianet News TamilAsianet News Tamil

இதவச்சு ஒரு பேக்கரியே ஆரம்பிக்கலாமே! மகன்களின் பிறந்தநாளுக்கு மலைபோல் கேக்கை குவித்து வைத்த நயன்தாரா - video

மலேசியாவில் மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

Nayanthara celebrate his sons uyir and ulag 1st birthday with cake feast in malaysia viral video gan
Author
First Published Sep 28, 2023, 10:17 AM IST

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கடந்தாண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இந்த ஜோடி, அவர்களுக்கு உயிர் ருதெரோனில், உலக் தெய்விக் என பெயரிட்டுள்ளனர். மகன்மளின் முகங்களை வெளியுலகுக்கு காட்டாமல் இருந்து வந்த நயன்தாரா, கடந்த மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் முதன்முதலில் இருவரது முகத்தையும் காட்டினார்.

நன்கு கொழுகொழுவென இருக்கும் இருவரது புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் செம்ம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், தங்களது முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் மலேசியா சென்றிருந்தனர். அங்கு உள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன்பு தங்கள் இரட்டை குழந்தைகளை தோழில் சுமந்தபடி போட்டோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருந்தார் விக்னேஷ் சிவன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Nayanthara sons birthday

இதையடுத்து இருவருக்கும் ஸ்டைலாக பேண்ட் ஷர்ட் போட்டுவிட்டு ஒரு போட்டோஷூட்டும் நடத்தி இருந்த விக்னேஷ் சிவன், அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஊர் கண்ணே பட்டுடபோகுது சுத்திப்போடுங்க என விக்னேஷ் சிவனுக்கு அறிவுறுத்தினர். அந்த அளவுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் மகன்களான உயிர் மற்றும் உலக் செம்ம கியூட்டாக இருந்தனர் அந்த போட்டோஷூட்டில்.

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் மகன்களின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஒரு கேக் கடையே வைக்கும் அளவுக்கு வித விதமான கேக்குகளை மலைபோல் அடுக்கி வைத்து மகன்களின் பிறந்தநாளை செம்ம கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. இதைப்பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், இதை வச்சு ஒரு பேக்கரியே ஸ்டார்ட் பண்ணிடலாமே என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் கவர்ச்சியால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios