Asianet News TamilAsianet News Tamil

மகன்களை இடுப்பில் வைத்துக்கொண்டு ஜாலியாக ரேம்ப் வாக் வந்த நயன்தாரா - வைரலாகும் வீடியோ

இரட்டை குழந்தைகளையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு நடிகை நயன்தாரா ஜாலியாக ஓட்டலில் நடந்து சென்றபோது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Nayanthara carrying kids and had a jolly walk in hotel viral video gan
Author
First Published Aug 13, 2024, 4:51 PM IST | Last Updated Aug 13, 2024, 4:51 PM IST

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவர் நடிப்பில் தற்போது டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறார். டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக இது உருவாகி வருகிறது. 

டாக்ஸிக் மட்டுமின்றி நடிகை நயன்தாரா, கைவசம் மண்ணாங்கட்டி திரைப்படமும் உள்ளது. இப்படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமும் நயன்தாராவின் லைன் அப்பில் உள்ளது. அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளாராம். அப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... நான் அந்த மாதிரி ஆள் இல்ல... தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்? - கொட்டுக்காளி விழாவில் வெடித்த சர்ச்சை

இதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் தொகுப்பாளராக கலந்துகொள்ளவும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இப்படி பம்பரம் போல் சுழன்று வரும் நயன்தாராவுக்கு, உயிர், உலக் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடனே அழைத்து சென்றுவிடுகிறாராம் நயன்தாரா.

அந்த வகையில் தற்போது டாக்ஸிக் பட ஷூட்டிங்கிற்காக வெளி மாநிலம் சென்றுள்ள நயன்தாரா, ஷூட்டிங் முடிந்து அங்குள்ள ஓட்டல் அறைக்கு வந்த போது எடுத்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தன் இரட்டை குழந்தைகளையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஜாலியாக நடந்து வருகிறார். அதன் பின்னணியில் அழகூரில் பூத்தவளே என்கிற மெலடி பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார் விக்கி. அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலால் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கொட்டுக்காளி படத்துக்காக... அவுத்துபோட்டு கூட ஆட ரெடி - Vulgar பேச்சால் முகம் சுளிக்க வைத்த மிஷ்கின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios