தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

 

இதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...!

அப்படி நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தீபாவளி விருந்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாரா  மரண மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று தனது 36வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே ரசிகர்களுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: “சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...!

அதாவது தனது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரித்து, தான் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டீசரை வெளியிடுவது தான் அது. இந்த படத்தில் முதன் முறையாக நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசரை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் ஒரு நிமிடம் பதறி தான் போய்விட்டனர். இதோ அந்த டீசர்...