Nayanthara: பிரமாண்ட கேக்... வானவேடிக்கை என சினிமாவை மிஞ்சிய நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரல் வீடியோ...
நடிகை நயன்தாரா (Nayanthara) இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை மிக பிரமாண்ட கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் காதல் பொங்க பொங்க கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை மிக பிரமாண்ட கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் காதல் பொங்க பொங்க கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (Lady Super Star Nayanthara) , அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய காதலருடன் நேரம் செலவிடவும், குடும்பத்தினரை பார்ப்பதற்கும் தவறியது இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய காதலி நயன்தாரா பிறந்தநாளை செம்ம மாஸாக கொண்டாடி வரும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இந்த வருடமும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
மேலும் செய்திகள்: Andrea Jeremiah: சேலைக்கு மேல் ஸ்டன்னிங் கோட்..! துளியும் கவர்ச்சி காட்டாமல் அழகில் அசர வைத்த ஆண்ட்ரியா..!
லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட பிரமாண்ட கேக்... மற்றும் நயன் என்ற எழுத்துக்களில் ஆன தனி தனி கேக் என, மிகவும் கலர் ஃபுல்லாக இந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை செலிபிரேட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் வான வேடிக்கை நிகழ்வுகளும் நடந்துள்ளது. சரியாக தன்னுடைய காதல் தேவதை நயன்தாராவிற்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள விக்னேஷ் சிவனின், வீடியோக்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: அஞ்சலி பாப்பானு நினைப்போ? தம்மாத்தூண்டு டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து மோசமாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா மிகவும் எளிமையாயாக மஞ்சள் நிற டீ - ஷர்ட் மற்றும் டெனிம் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்துள்ளார். விக்னேஷ் சிவன், வழக்கம் போல் கட்டி பிடித்து தன்னுனடய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய் மகள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா போலவே இருக்கும் ஆராத்யா!
இந்த வருடம் காதலர்களாக பிறந்தநாளை கொண்டாடிய இந்த ஜோடி, அடுத்த வருடம் கணவன் மனைவியாக பிறந்தநாளை கொண்டாடுவார்களா? என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. காரணம், பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி ஷாக் கொடுத்தார்.
மேலும் செய்திகள்: புதிய படத்தில் இருந்து திடீர் என விலகிய நயன்தாரா? இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்!
இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு முன் தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இருவருமே அடுத்தடுத்த வேளைகளில் கவனம் செலுத்தி வருவதால்... இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.