ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆனது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான 'பேட்ட' திரைப்படத்தை விட, சூப்பர் ஸ்டார் "தர்பார்" படத்தில் எங் லுக்கில் செம்ம சுறுப்பாக பட்டையைக் கிளப்பியிருக்கார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தர்பார் திரைப்படம் இன்று வரை தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக அந்த படத்தில் வெறும் அழகு பதுமையாக மட்டும் நயன்தாராவை பயன்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

இதையும் படிங்க: திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகு... புன்னகை அரசி சினேகாவின் பட்டாஸ் கிளப்பும் புகைப்பட தொகுப்பு...!

'சந்திரமுகி' படத்தில் நடித்த போது புதுமுகமாக இருந்த நயன்தாரா, இப்போது லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்து விட்டார். அதனால் "தர்பார்" படத்தில் அவருக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் "தர்பார்" படத்தில் அப்படி எதுவும் இல்லை என்பது நயன் ஃபேன்ஸை செம்ம அப்செட்டாக்கியுள்ளது. 

ஹீரோவை காதலிப்பது, நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, கவர்ச்சி காட்டி அசரடிப்பது என்ற டிராக்கை விட்டு எப்போதோ வெளியே வந்த நயன்தாராவை, ஏ.ஆர்.முருகதாஸ் வலுக்கட்டாயமாக பழைய ரூட்டுக்கு திருப்பிவிட்டிருக்கார்.

"தர்பார்" படத்தின் முதல் பாதி முழுவதிலும் நயன்தாராவின் அழகில் சொக்கிப் போய் சூப்பர் ஸ்டார் அவரை காதலிக்க துரத்துகிறார். இரண்டாவது பாதியில் நயன்தாரா, சூப்பர் ஸ்டாரை காதலிக்க தொடங்குகிறார். இப்படி தர்பார் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் லேடி சூப்பர் நடித்தது ஏன் என தெரியவில்லை. 

இதையும் படிங்க: நெற்றியில் குங்குமம்... கண்ணுல ஸ்டைலா கூலிங் கிளாஸ்... காதலனுடன் ஆன்மிக செல்ஃபியை வெளியிட்ட நயன்தாரா...!

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்த நயன்தாரா, அந்த படம் தான் என் கெரியரில் செய்த மிகப்பெரிய தவறு என பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இல்லாமலேயே தர்பார் படத்தை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இப்போது தர்பார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்ம லேடி சூப்பர் ஸ்டார் என்ன சொல்ல போறாங்கன்னு கேட்க ரசிகர்கள் மரண வெயிட்டிங். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நயன்தாரா ஏற்கனவே செம்ம கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.