பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவிற்கு அரக்கு நிற பட்டுப்புடவையில் அம்சமாக வந்த நயன்தாராவின் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதில் நயன் மட்டுமே தனியாக இருந்ததால், நயனுக்கும், விக்கிக்கும் பிரேக்கப் ஆகிடுச்சி, நியூர் பார்ட்டியில விக்னேஷ் சிவன் செம்ம போதையில் இருந்தார், அதனால் நயன்தாரா கோவமா இருக்காங்க என விதவிதமான வதந்திகள் பரவின.

இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விக்கியுடன் அதே அரக்கு நிற பட்டுப்புடவையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார், நம்ம சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த தர்பார் படம் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது. 

தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் கதையான மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அந்த படத்தில் நடிப்பதற்காக கன்னியாகுமரி சென்ற நயன்தாரா அங்குள்ள கோவில்களுக்கு எல்லாம் காதலர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு ஆன்மீக டூர் கிளம்பினார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

சமீபகாலமாக அந்த மாதிரி புகைப்படங்கள் எதுவும் வெளியாகமால் இருந்தன. ஆனால் தற்போது நெற்றியில் குங்குமத்துடன், கண்ணுல ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்த படி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக எடுத்துக் கொண்ட செல்ஃபி, சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.