நடிகை நயன்தாரா அடிக்கடி,  சாமி தரிசனம் செய்ய தன்னுடைய காதலருடன் கோவில்களுக்கு விசிட் அசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் திருப்பதி கோவில், கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவில், திருச்செந்தூர் கோவில் ஆகியவற்றிற்கு சென்று வந்த நிலையில், தற்போது சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு காதலனுடன் சென்று வழிபட்டு திரும்பியுள்ளார்.

இவர்கள் சென்ற நேரத்தில்  ஸ்ரீபலி பூஜைக்காக அர்ச்சகர்கள் நடையை சாத்தி விட்டு பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்ததால், பக்தர்களுடன் காத்திருந்து நயன்தாரா சுவாமியை வழிபாட்டு சென்றுள்ளார்.

மஞ்சள் நிற சுடிதாரில், கொண்டை போட்டு சுற்றி பூ வைத்து, நெற்றியில் பொட்டு, கையில் மருதாணி என மங்களகரமாய் கோவிலுக்கு வந்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் சட்டை போடாமல் மேலே துண்டு மற்றும் போத்தி கொண்டு, காதலி நயன்தாராவுடன் சாமியை வழிபட்டார்.

தற்போது இவர்களின் இந்த ஆன்மீக விசிட் பற்றிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் எப்படியும் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.