nayanthara and vignesh sivan issue
நடிகை நயன்தாராவை பற்றி எப்போதும் எதாவது ஒரு கிசுகிசு வந்துவிடும் இது ஒன்றும் புதிதில்லை. ஆனால் என்ன கிசு கிசு வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருவதால் தான் இன்று நயன்தாரா மற்ற நடிகைகள் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தன்வசம் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளிவந்தன. அதற்கு ஏற்றதுபோல் இருவரும் தற்போது வரை ஒன்றாகத்தான் வெளிநாடுகளுக்குக் கூட சென்று வருகின்றனர்.
மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு முறை கூட இது குறித்து விக்னேஷ் சிவனோ அல்லது நயன்தாராவோ கூறியது இல்லை.

தற்போது வெளிவந்துள்ள தகவலில், இவர்கள் இருவரும் வசித்து வரும் வீட்டிற்கு விக்னேஷ் சிவனின் அம்மா சென்றுள்ளராம். ஆனால் நயன்தாராவிற்கும் இவருக்கும் ஒரு சில விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.
![]()
