லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. நயனை தங்கமே, தங்கமே என கொஞ்சும் விக்னேஷ் சிவன் அவ்வப்போது அவர் அழகை வர்ணித்து டுவிட்டரில் கவிதை எழுதி வருகிறார். 

இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின்  35வது பிறந்தநாளை கொண்டாட காதல் ஜோடி நியூயார்க் சென்றுள்ளது. 

அங்கு தயாரிப்பாளர் போனி கபூர், அவரது மகள் குஷி கபூர் ஆகியோருடன் நயனும், விக்கியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் அஜித்தின் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதனிடையே, சென்ட்ரல் பார்க்கில் விக்கியும், நயனும் வாக்கிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது காதலி நயன்தாராவுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் புகழ்பெற்ற Brooklyn Bridge மீது நின்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.