மகாபலிபுரம் கடற்கரையில் நேற்று திருமணம் செய்து கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று சர்ச்சையில் சிக்கினர். 

மகாபலிபுரம் கடற்கரையில் நேற்று திருமணம் செய்து கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று சர்ச்சையில் சிக்கினர். திருமணம் முடிந்தவுடன் கணவருடன் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த நயன்தாரா அங்கு அத்துமீறியுள்ளார். நயன்தாரா இன்று மதியம் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய கணவர் விக்னேஷுடன் வந்தார். இது நல்ல விஷயம் தான். ஆனால், வீதிகளில் சுற்றுவதை போல் செருப்பு அணிந்து, ஸ்ரீவாரி சந்நிதியில் அவர் நடந்தது பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அவருடன் வந்த கணவர் விக்னேஷ் செருப்பு அணியவில்லை. நயன்தாரா, விக்னேஷ் இருவரும் கோயில் முன்பு ஸ்ரீவாரி சந்நிதியில் போட்டோஷூட்டில் பங்கேற்றனர். இவர்களை படமெடுக்க வந்த கேமராமேன்கள் மற்றும் போட்டோகிராபர்களும் செருப்பு, ஷூ அணிந்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.

அதுமட்டுமின்றி, ஸ்ரீவாரிக்கு அருகில் நின்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை கண்ட பக்தர்கள் கடும் கணடனம் தெரிவித்தனர். கடவுளின் சந்நிதியில் இருப்பதை மறந்து, அந்தரங்க போஸ்கள், புகைப்படங்கள் எப்படி எடுக்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மாட வீதிகளில் ஸ்ரீவாரி ஊர்வலம் நடைபெறுகிறது. சாதாரண பக்தர்கள், சக வி.ஐ.பி.க்கள் கூட, செருப்புகளை வெகு தொலைவில் விட்டுவிட்டு வீதிக்கு வருகிறார்கள். பக்தர்களின் மனநிலையைப் பொருட்படுத்தாமல் புனிதமான ஸ்ரீவாரி சந்நிதியில், நயன்தாரா செருப்புடன் வந்தது தவறு என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவாரி சந்நிதியில் செருப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நயன்தாராவும், விக்னேஷும் திருமலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் திருமண இடம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவாரி சந்நிதியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிக்கு அங்கு நடக்கும் நடைமுறைகள் தெரியுமா என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திருமலையின் தெருக்களில் செருப்பு அணியக்கூடாது என்ற பலகைகள் திருமலையில் பல இடங்களில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி மைக்குகள் மூலமாகவும் இந்த விஷயங்களை அறிவித்து வருகின்றனர். சாதாரண பக்தர்கள் யாரும் செருப்பு அணிந்து கோவில் முன் வருவதில்லை. புனித திருமலை சந்நிதியை நயன்தாரா ஜோடி சினிமா ஸ்பாட் ஆக்கி விட்டதாக ஜனசேனா தலைவர் கிரண் ராயல் குற்றம் சாட்டினார். மேலும் ஸ்ரீவத்சனின் முன்னிலையில் சாமானியர்களுக்கு ஒரு முறையும், பிரபலங்களுக்கு ஒரு முறையும் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Scroll to load tweet…